விஜய் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான பகவதி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான ஜெய், சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு-2 என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இளம் நடிகராக திகழ்ந்து வருகிறார். தற்பொழுது ஜெய் அவர்கள் இசையமைப்பாளராக ‘சிவசிவா’ என்ற படத்தில் முதன்முதலாக புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.
இது குறித்து நடிகர் ஜெய் பேசுகையில், ” இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவில் தான் நான் சினிமா துறையில் நுழைந்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக நான் நடிகரானேன். இந்நிலையில் தற்பொழுது எனது 19 வருடக் கனவு நிறைவேறியுள்ளது” என்று மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார். எஸ்.ஐஸ்வர்யாவின் Lendi Studio தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ஜெய்யின் ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் ஆக்ஷனா சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.