விஜய் ஆண்டனி ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.
2005 ஆம் வருடம் வெளியான சுக்ரன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. இதையடுத்து டிஷ்யூம், காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், யுவன் யுவதி, வேலாயுதம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார். இதன்பின் 2012 ஆம் வருடம் வெளியான நான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதன்பின்னர் சலீம், பிச்சைக்காரன், சைத்தான், காளி, திமிரு புடிச்சவன் என பல திரைப்படங்களில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் விஜய் ஆண்டனி இசை அமைத்த முதல் பாடல் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். அந்த வீடியோவானது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த பாடலை ரசிகர் ஒருவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதனை விஜய் ஆண்டனி பகிர்ந்து அந்த பாடல் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, என்னுடைய முதல் கேவலமான மெட்டு. சில சமயம் முதல் பாடல். போறப்போக்க பார்த்தா ஹிட்டாகிடும் போல இருக்கே என பதிவிட்டிருக்கின்றார். விஜய் ஆண்டனியின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.
My first கேவலமான tune😎
Some ones first cover version.
போற போக்க பாத்தா ஹிட் ஆகிடும் போல இருக்கே🤔 https://t.co/7koADIY2gy— vijayantony (@vijayantony) October 7, 2022