Categories
தேசிய செய்திகள்

“என்னால முடியல” வீடியோ வெளியிட்டு…. தற்கொலை செய்துகொண்ட கொடூரம்….!!!!!

உத்தர பிரதேச மாநிலம் பரியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் மந்தீப் கவுர் (வயது 30) என்ற பெண். சீக்கிய குடும்பத்தை சேர்ந்த இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவரான ரஞ்சோத்பீர் சிங் சந்து என்பவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. பெற்றோர்கள் பார்த்து வைத்து திருமணமான இவர்களுக்கும் 6 மற்றும் 4 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சோத்பீர் சிங் சந்து லாரி ஓட்டும் பணிக்கு தன் குடும்பத்தையும் அமெரிக்கா அழைத்து சென்றுவிட்டார்.

இந்த நிலையில், ரஞ்சோத்பீர் சிங் சந்துவிற்கு ஆண் குழந்தை வேண்டி பல வருடங்களாக மந்தீப் கவுரை சித்திரவதை செய்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த மந்தீப் கவுர் வீடியோ ஒன்றை வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அந்த வீடியோவில், “என் கணவர் என்னை தினமும் அடித்து துன்புறுத்தி வருகிறார். இதற்கு மேல் என்னால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் கணவர் அடிப்பதற்கு எனது மாமியாரும் உடந்தையாக இருக்கிறார். மேலும் அவரை தூண்டிவிடுகிறார் என தெரிவித்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |