இளம்பெண் ஒருவர் தன் தந்தையின் இழப்பிற்கு தானே காரணம் என்று மன வேதனையுடன் கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இளம் பெண் ஒருவர் கொரோனா குறித்த விழிப்புணர்வு மற்றும் அக்கறையின்றி இருந்துள்ளார். மேலும் இந்த கொரோனா பாதிப்பு என்பது சாதாரண காய்ச்சல் தான் இதனை இவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கூறி வந்துள்ளார். இந்நிலையில் அப்பெண்ணுக்கு கொரனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது அவரின் நண்பர்களுடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதால் அவருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றிற்கான அறிகுறிகளும் அவருக்கு தென்பட்டுள்ளது. ஆனால் அவர் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
அதன் பின் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் கொரோனோ, சாதாரண காய்ச்சல் அல்ல என்று அவரின் நண்பர்களுக்கு அறிவுரை கூறி வருகிறார். இதற்கிடையில் இவரின் நோய் பாதிப்பு அவரது தந்தைக்கும் பரவியுள்ளது. இதனை தொடர்ந்து அவர் இரண்டு வார சிகிச்சைகளுக்கு பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் அப்பெண் தன் தந்தையின் இழப்பிற்கு தானே காரணமாகி விட்டதாக மன வேதனையில் உள்ளார். மேலும் இவரின் தந்தை மருத்துவமனையில் இருந்த போது அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் அவரோ தன் பாதிப்புக்கு தன் மகள் ஒரு போதும் காரணமாக முடியாது என்று கூறியுள்ளார்.