Categories
தேசிய செய்திகள்

என்னாத்துக்கு நோட்டு எனக்கு ஒரு டவுட்டு…. வைரலாகும் பிரபுதேவா பாடல்…!!!

இந்திய மக்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரபு தேவா பாடல் வைரலாகி வருகிறது.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதிலும் சில கட்சிகள் தொகுதி பங்கீடு பற்றிய தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனால் மாநிலம் முழுவதிலும் தீவிர கண்காணிப்பு பணி நடந்துவருகின்றது.

இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர் பாடிய, “என்னாத்துக்கு நோட்டு எனக்கு ஒரு டவுட்டு” என்ற பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Categories

Tech |