நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரம்யா கிருஷ்ணன் அணிந்து வந்த புடவையின் மதிப்பு 1.25 லட்சமாம்.
தமிழ் சினிமாவில் வெளியான ரஜினியின் படையப்பா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இதை தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்கள் நடித்து தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். குறிப்பாக அம்மன் வேடம் என்றாலே இவரைத்தான் தேர்வு செய்வார்கள். இதைத்தொடர்ந்து நடிகர் பிரபாஸின் பாகுபலி படத்தில் இவர் நடித்திருந்த ராஜமாதா கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இப்படி எந்த கதாபாத்திரத்திலும் துணிச்சலோடு தைரியமாகவும், சிறப்பாகவும் ரம்யா கிருஷ்ணன் நடித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே.
சமீபத்தில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்த நிலையில் தற்பொழுது வேறு ஒரு நடன நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வருகின்றார். இந்த நிகழ்ச்சிக்காக அவர் விலையுயர்ந்த ஒரு உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி தனது இன்ஸ்டால் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் விலையுயர்ந்த புடவையை அணிந்திருந்தார். அதன் மதிப்பு 1.25 லட்சமாம் குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/p/CiWxl8Dryx0/?utm_source=ig_embed&ig_rid=2e3fcd12-586f-4605-b650-fc0abfb520d2