திமுக கட்சியின் தலைவராக முதல்வர் ஸ்டாலின் 2-வது முறை பதவியேற்றதை கொண்டாடும் விதமாக சமீபத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரையில் ஒரு விருந்து கொடுத்திருந்தார். இந்த விருந்து நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் தளபதி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் புறக்கணித்ததோடு விருந்துக்கு சென்றவர்களை மிரட்டியதாகவும் புகார் எழுந்தது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர், முதல்வர் ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக தான் விருந்து கொடுக்கிறோம். ஆனால் சிலர் இந்த விருந்தை புறக்கணித்ததோடு மிரட்டலும் விடுத்திருப்பது வேதனை தருகிறது. மதுரையில் என்னால் பயன் அடைந்து செய்நன்றி மறந்தவர்களும் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு நடக்க வேண்டியது கூடிய விரைவில் நடக்கும் என்று கூறினார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தியாகராஜன் மதுரையில் நடந்த நிகழ்வை மனதில் கொண்டு நான் யாருக்கும் அடிமையாக இருக்க மாட்டேன் என்று மிகவும் ஆவேசமாக கூறியிருந்தார். இதை கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால் முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு நிதி அமைச்சரை அழைத்து அவருக்கு பாடம் நடத்தினாராம். மேலும் இதனால்தான் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அக்டோபர் 14-ஆம் தேதி என்னுடைய வாழ்க்கையில் மிகவும் கடினமான நாள் என்று பதிவிட்டு இருந்தாராம்.