நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் முடிந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார். தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றிய போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. இவர்கள் அவ்வப்போது வெளியே செல்லும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இதனால் திரைபிரபலங்கள் ரசிகர்கள் உள்ளிட்டோர் திருமணம் எப்போது என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்னையில் உள்ள பாரிமுனை காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளனர். அப்போது எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அப்படத்தில் நயன்தாரா நெற்றியில் குங்குமத்துடன் இருப்பதால் இருவருக்கும் திருமணம் நடந்து விட்டதாக என்ற பேச்சு கிளம்பியுள்ளது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்தில் நயன்தாரா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.