Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னாது துணிவு படத்தில் இவர் நடிக்கிறாரா….?” இது வேற லெவல்யா….!!!!!

துணிவு திரைப்படம் குறித்து சமுத்திரக்கனி பகிர்ந்த twitter பதிவு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர் ஆக வலம் வருகின்றார் அஜித் குமார். வலிமை படத்திற்குப் பிறகு அஜித் மற்றும் எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் உருவாகி வருகிறது. வலிமை படத்தின் வெற்றியால் இருவரும் மீண்டும் இணையும் புதிய படம் தொடர்பான செய்திகள் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு துணிவு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடிக்கின்றார் குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க போனி கபூர் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தை அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியிடப் படக்குழு திட்டமிட்டு இருக்கின்றது. நேற்று மாலை இத்திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இத்திரைப்படத்தில் சமுத்திரக்கனி நடித்ததாக இணையத்தில் செய்தி வெளியான நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமுத்திரக்கனி வெல்வோம் என கேப்ஷன் கொடுத்திருக்கின்றார். இதன் மூலம் இத்திரைப்படத்தில் சமுத்திரக்கனி நடித்தது உறுதியாகி இருக்கின்றது. இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |