Categories
மாநில செய்திகள்

என்னாது!… அவங்களுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாமா?…. தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு….!!!!

பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது. இவற்றில் மருத்துவம், கலை அறிவியல் உட்பட பல பாட பிரிவுகளில் படித்து முடித்த 2,241 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இவ்விழா அந்த பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஏசி சண்முகம் தலைமையில் நடந்தது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று இந்திய மருந்தக கவுன்சில் மோண்டு பட்டேல், திரைப்பட டைரக்டர் சுந்தர் சி, விஜிபி குழுமதலைவர் சந்தோஷம், லைக்கா மருத்துவ குழும தலைவர் பிரேமா சுபாஸ்கரன் போன்றோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

அப்போது தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது “வெளியுலகில் பிரபலமாகவுள்ள மனைவிக்கு கணவராக இருப்பதற்காகவே டாக்டர் பட்டம் கொடுக்கலாம். உழைப்பு இன்றி எத்துறையிலும் முன்னேற இயலாது. தாய், தந்தையிடம் அன்பாக இருக்க வேண்டும். இந்தியாவில் இளம்வயது ஆளுநர் நான் தான்” என்று பேசினார். அத்துடன் அவர் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கலகலப்பாகவும், நகைச்சுவையுடனும் பேசியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |