உலகம் முழுவதும் உள்ள மக்கள் facebook, whatsapp, twitter, instagram போன்ற ஏதோ ஒரு சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகிறார்கள் இதில் twitter தவிர மற்றும் மூன்று சமூக வலைதளங்களுமே மெட்டாநிறுவனத்திற்கு சொந்தமானது. அதன்படி இன்ஸ்டாகிராம் தளத்தை எடுத்துக் கொண்டால் விதவிதமான போட்டோக்களை அப்லோடு செய்யும் வீடியோக்களை அப்லோடு செய்யவும் விரும்பும் அவர்களுக்கு அது உதவியாக இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல்டிக் டாக்கை தடை செய்யப்பட்டதிலிருந்து அனைவரும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுத்து வருகின்றனர்.
மேலும் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் வசதியும் உள்ளது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் செயலி அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐயப்பா போன்ற பகுதியில் நேற்று இரவு ஒரு மணி நேரம் முடங்கியது. அதனை போல இந்தியாவில் நேற்று இரவு 10:30 மணி முதல் ஒரு மணி நேரத்துக்கு இன்ஸ்டாகிராம் சேவை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சேவை பாதிப்பை உறுதி செய்த அந்நிறுவன சில மணி நேரங்களை சேவை சரி செய்தது. மேலும் இன்ஸ்டாகிராம் சேவை பாதிக்கப்பட்டதையடுத்து நெட்டிசன்கள் அதனை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.