மும்பை மராட்டிய மாநிலத்தில் நாக்பூரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் என்னை அடையாளம் தெரியாத 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பட்டப்பகலில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததை அறிந்த, நாக்பூர் நகர காவல்துறை கமிஷனர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கல்மாணா நிலையத்தை வந்தடைந்தனர்.
அந்த பெண் அளித்துள்ள புகார் மனுவில்,நான் நடன வகுப்பிற்கு செல்லும் போது ஒரு வேனில் 2 மர்ம நபர்கள் என் அருகே வந்து விலாசம் ஒன்றை காட்டி, இந்த விலாசத்திற்கு எவ்வாறு செல்ல வேண்டும் என்று வழி கேட்டனர். மாணவர்களுக்கு பதில் கூறிக் கொண்டிருக்கும் போதே என்னை வேனுக்குள் தூக்கி போட்டுகொண்டு சென்றனர். மேலும் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அந்த வேனை கொண்டு சென்று, அங்கு வைத்து என்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் முழுவதையும் அந்த பெண்ணிடமிருந்து கேட்டறிந்த பின்னர், குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். காவல்துறையினர், அந்த பெண்ணிடம் கேட்டறிந்த வாக்குமூலத்தை வைத்து, எல்லா இடங்களிலும் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆனால் அப்படி எந்த வேணும் அந்தப் பகுதியில் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அந்த பெண் சென்ற இடங்களையைல்லாம் சிசிடிவி பதிவின் மூலம் கண்காணித்துக் கொண்டு வந்தனர்.
அப்போதுதான் ஒரு பெரிய அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது. அது என்னவென்றால், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் அந்த பெண்மணி சம்பவத்தன்று காலை 9.30 மணிக்கு ஒரு பேருந்தில் இருந்து இறங்கி உள்ளார் அதன் பின்னர், 10 மணிக்கு ஜான்சிராணி சதுக்கம் வரை நடந்து சென்றுள்ளார். 10 ;15 மணிக்கு ஆனந்த் டாக்கீஸ் சதுக்கத்தில் இருந்து ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்துள்ளார். அதன் பின்னர், 10:25 மணிக்கு மாயோ மருத்துவமனையில் இறங்கியுள்ளார்.
தொடர்ந்து சிக்காலி சதுக்கத்திலிருந்து 10;54 மணிக்கு ஆட்டோ ரிக்க்ஷா ஏறியுள்ளார். மேலும் காவல் நிலையத்தின் அருகே இருக்கும் பெட்ரோல் பங்கில் பதிவான சிசிடிவி காட்சியில் அவர்கள் கல்மாணா காவல் நிலையத்தை நோக்கி 11;04 மணி அளவில் நடந்து வருவது பதிவாகியுள்ளது. இதையடுத்து அந்த இளம் பெண்ணிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவர் தன் காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக இவ்வாறு நாடகம் நடத்தியதாக ஒப்புக்கொண்டார்.
தான் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வெளியில் தெரிந்தால் தான், விரும்பும் நபருக்கு என்னை திருமணம் செய்து வைப்பார்கள் என்று எண்ணி, இத்தகைய நாடகம் நடத்தியதாக அவர் ஒத்துக்கொண்டார். அதனால் காவல்துறையினரின் நிலைதான் மிகவும் பரிதாபத்தில் உள்ளது. உண்மை இவ்வாறு இருக்க, அவர்கள் ஒருபுறம் குற்றவாளிகளை தேடி அலைந்தனர். இறுதியில் அவர்கள் முயற்சி அனைத்தும் வீணாகப் போய்விட்டது.