Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்னமா ஆடுறாருப்பா….. “ஸ்ட்ரைக் ரேட் 180″….. ஒரே ஆண்டில் அதிக ரன்கள் அடித்து தவானை காலி செய்த சூர்யா..!!

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஓராண்டில் அதிக ரன்கள் அடித்து சூர்யகுமார் யாதவ் சாதனை படைத்துள்ளார்.

இந்திய அணியில் தற்போது தவிர்க்க முடியாத வீரராக இருப்பவர் சூர்யகுமார் யாதவ். இந்தியாவின் மிஸ்டர்  360 என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் மைதானத்தின் அனைத்து திசையிலும் சிக்ஸர் அடிக்கக்கூடிய வல்லமை படைத்தவர்.. அதேபோல ஓபனிங் ஆக இருந்தாலும் சரி, மிடில் வரிசையாக இருந்தாலும் சரி, எந்த இடத்தில் இறக்கி விட்டாலும் சூழ்நிலைக்கு ஏற்றபடி ஆடக்கூடியவர்.. சூர்யகுமார் யாதவ் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். இவர்  கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரிலும் சிறப்பாகவே ஆடி இருந்தார். அதில் கடந்த 25ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 36 பந்துகளில் 69 ரன்களை விளாசி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி 50 ரன்கள் விளாசினார். இதனால் இந்த ஆண்டு டி20 போட்டியில் இதுவரை 732 ரன்கள் விளாசியுள்ளார்.. இதன்மூலம் சர்வதேச டி20 போட்டியில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த ஆண்டில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 180 ஆகும்..

இதற்கு முன் கடந்த 2018 ஆம் ஆண்டு ஷிகர் தவான் 689 ரன்கள் அடித்து இருந்ததே ஒரு காலண்டர் ஆண்டில் இந்திய வீரர் அடித்த அதிக பட்ச ரன்னாக இருந்தது.. இந்த நிலையில் தான் சூர்யகுமார் யாதவ் அந்த சாதனையை முறியடித்து முதல் இடத்தில் உள்ளார். இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக ஆடி வரும் சூர்யகுமார் யாவ் வருகின்ற டி20 உலகக் கோப்பை தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை தொடரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஐசிசி டி20ஐ தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் 801 ரேட்டிங் புள்ளியுடன் 2ஆவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |