பிக்பாஸ் சீசன் 6 குறித்து வெளியான தகவலால் பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அக்டோபர் மாதம் 9ஆம் தேதி பிக்பாக்ஸ் 6 நிகழ்ச்சி தொடங்கும் என கூறப்படுகின்ற நிலையில் போட்டியாளர்களின் பட்டியல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் ராஜலட்சுமி, விஜே அர்ச்சனா, ஸ்ரீநிதி சுதர்சன் உள்ளிடோர் பங்கேற்பது உறுதியாகிவிட்டதாக பேசப்படுகின்றது.
இந்த நிலையில் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பு நேரம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும். மேலும் வார இறுதி நாட்களில் இரவு 9:30 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும் என சொல்லப்படுகின்றது. இதைக் கேட்ட பார்வையாளர்கள் 10 மணிக்கு மேல் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்புவதா? நாங்க எப்ப பாத்துட்டு எப்ப தூங்குறது என அதிருப்தி அடைந்துள்ளார்கள். சிலரோ அது என்ன பத்து மணி ஒரேடியாக 12:00 மணிக்கு மாற்ற வேண்டியது தானே என கடுப்பாகி உள்ளார்கள்.