Categories
மாநில செய்திகள்

என்னப்பா பாக்குற!…. எனக்கும் கொஞ்சம் காட்டு!…. பாகனிடம் கொஞ்சும் கியூட் யானை….!!!!!

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 56 வயதான மங்களம் யானை தன் பாகன் செல்போன் பார்த்தால், அதனை தன்னிடம் காட்ட வேண்டும் என அடம்பிடிக்கும். இந்த யானையின் க்யூட்டான செயலை பார்க்க தனி கூட்டமே இருக்கிறது. அந்த யானையானது பாகனிடம் பேசுவது மற்றும் கொஞ்சும் காட்சிகளை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறதாம்.

கோயில் வளாகத்தில் யானைப் பாகனுடன் ஓடிபிடித்து விளையாடுவது, பாகன் மீது பாசத்துடன் சாய்ந்து கொஞ்சுவது ஆகியவற்றை காண்பதற்காகவே கோவிலுக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகம் என்றே கூறவேண்டும். இவ்வாறு இந்த யானையின் க்யூட்டான செயல்கள் அனைத்தும் காண்போர்கள் ரசிக்கும் விதமாக இருக்கிறது. இந்த வீடியோ சமூகஊடகங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

 

Categories

Tech |