தேர்தலை முன்னிட்டு 3 நாள்கள் விடுமுறை என்பதால் மதுபான கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் அலைமோதியது .
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுக்கடைக்கு நேற்று முதல் ஆறாம் தேதி வரை மூன்று நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் கூட்டம் நேற்று மதுக்கடைகளில் மதுபானம் வாங்குவதற்காக அலைமோதியது.
மது பிரியர்கள் தங்களுக்கு விருப்பமான மதுபானங்களை காரைக்குடி பகுதியில் உள்ள மதுக் கடைகளில் கூடுதலாக வாங்கிச்சென்றனர். அதேபோல் சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை ஆகிய பகுதிகளிலும் மது பிரியர்கள் கூட்டம் மதுபான கடைகளில் அலை மோதியது.