Categories
மாநில செய்திகள்

என்னது…. முதல்வரை துறை டெண்டரில் முறைகேடா?…. புதிய பரபரப்பு….!!!!

மாற்றுத்திறனாளிகளுக்கான டெண்டரை தமிழக முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்களை வழங்கி வருகிறது. தற்போது மாற்றுத்திறனாளிகளுக்காக முதல்வர் ஸ்டாலின் சாய்ஸ் பேஸ்டு மாடல் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக அரசு வழங்கும் இலவச உபகரணங்களை விட அதிக வசதிகள் கொண்ட உபகரணங்களை கூடுதல் விலை கொடுத்து மாற்றுத்திறனாளிகள் பெறுவதாகும். இது ஒரு சிறந்த திட்டம் என்றாலும், இதில் முறைகேடுகள் நடந்து இருக்குமோ என்ற சந்தேகம் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் எழுந்துள்ளது. அதாவது அரசு வழங்கும் இலவச உபகரணங்களை விட மாற்றுத்திறனாளிகள் கூடுதல் விலைக்கு உபகரணங்களை வாங்கினாலும் அதை தாங்கள் விருப்பப்பட்ட நிறுவனங்களில் வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது அரசு கூறும் நிறுவனங்களில் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் கூடுதல் விலை கொடுத்து உபகரணங்கள் வாங்குமாறு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புதிய திட்டத்தின்படி பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் 1.6 லட்சம் மதிப்பில் பேட்டரி சக்கர நாற்காலிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்குகிறது. இதேப்போன்று மற்றொரு நிறுவனத்தில் ரூபாய் 2.5 லட்சம் மதிப்பில் 2 மாடல்களில் பேட்டரி சக்கர நாற்காலிகள் தயாரிக்கப்படுகிறது. இதை மாற்றுத்திறனாளிகள் வாங்க வேண்டும் என்றால். இந்த நிறுவனத்தில் மட்டுமே வாங்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. இதன்காரணமாக கூடுதல் விலை கொடுத்தாலும் விருப்பப்பட்ட நிறுவனங்களில் நான்கு சக்கர நாற்காலிகளை வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேப்போன்று காது கேட்காதவர்களுக்கு செவித்திறன் கருவி 2,780 ரூபாயில் இலவசமாக அரசு வழங்குகிறது. இதே கருவி 7,900 ரூபாய் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கூடுதல் விலை கொடுத்தாலும் குறிப்பிட்ட நிறுவனத்தின் கருவியை மட்டுமே வாங்க முடிகிறது.

இதேப்போன்று 6,840 ரூபாயில் இலவச தையல் மெஷின் வழங்கப்படுகிறது. இதைவிடக் கூடுதல் விலையில் 23,250 ரூபாயில் கிடைக்கிறது. ஆனால் டெண்டர் முறைப்படி அரசு குறிப்பிட்ட நிறுவனத்தில் மட்டுமே தையல் மெஷினை வாங்க முடியும். இதன் காரணமாக மாற்றுத்திறனாளிகள் டெண்டரில் முறைகேடுகள் ஏற்பட்டிருக்கும் என்று அச்சமடைந்துள்ளனர். கூடுதல் விலை கொடுத்தாலும் மாற்றுத்திறனாளிகள் விருப்பப்பட்ட நிறுவனங்களின் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே முதல்வர் மு.க ஸ்டாலின்  இந்த டெண்டரை மறுபரிசீலனை செய்து முறைகேடுகள் இருப்பின் அதை ரத்து செய்ய வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |