Categories
தேசிய செய்திகள்

என்னது….!! பலாப்பழம், கேஸ் ஸ்டவ்விற்கு பேருந்து கட்டணமா…? வெளியான நகைச்சுவை சம்பவம்….!!!

டிக்கெட் பரிசோதகர் பேருந்தில் பயணமான பலாப்பழத்திற்கும்,கேஸ் ஸ்டவ்விற்கு டிக்கெட் போடவில்லை என கண்டெக்டர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் நடந்த இருவேறு சம்பவங்கள் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. கர்நாடக மாநில அரசுக்கு சொந்தமான அம்மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் பேருந்து ஒன்று ராய்ச்சூர் வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ்சில் ஏறிய பெண்ணொருவர் கையில் கேஸ் ஸ்டவ் ஒன்று வைத்து உள்ளார்.அதன் பின் வழக்கம்போல் பஸ் கண்டெக்டர் அந்த பெண்ணிற்கு மட்டும் ஒரு டிக்கெட் வழங்கியுள்ளார்.

இதனை அடுத்து பேருந்தில் பரிசோதனை செய்த டிக்கெட் பரிசோதகர், இந்த பெண்ணிற்கு மட்டும் டிக்கெட் வழங்கிவிட்டு, கேஸ் ஸ்டவ்விற்கு டிக்கெட்  வழங்காததால் அந்த பேருந்து  நடத்துனர் கோரக்நாத் என்பவர் மீது டிக்கெட் பரிசோதகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.இதேபோல் வேறு ஒரு சம்பவத்தில் இதே மாதிரி ஒரு நடத்துனர் பலாப்பழம் கொண்டு வந்த ஒருவருக்கு அந்த பலாப்பழத்திற்கு டிக்கெட் எடுக்கவில்லை எனக் கூறி டிக்கெட் பரிசோதகர் கண்டெக்டர் ரகு என்பவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த இரு கண்டெக்டர்கள் மீதும் டிக்கெட் பரிசோதகர் ஒழுங்கு நடவடிக்கையை மீறியதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் 25 கிலோவுக்கு அதிகமான பொருட்களை பேருந்தில் கொண்டுவந்தால் தான் டிக்கெட் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது கர்நாடக அரசின் போக்குவரத்து விதிமுறைகள் ஆகும். எனவே இச்சம்பவம் குறித்து இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |