Categories
உலக செய்திகள்

என்னது….? தந்தையிடமிருந்து வாடகையா….? பெருந்தொகையை வசூலிக்கும் மகன்….!!

மன்னர் சார்லஸின் சொத்துக்களில் முக்கிய தோட்டம் ஒன்று இளவரசர் வில்லியம் வசம் உள்ள நிலையில், தற்போது தந்தையிடமிருந்து வாடகையாக மட்டும் பெருந்தொகையை வசூலிக்க இருக்கின்றார்.

மகாராணியாரின் மறைவுக்கு பின்னர் முக்கிய ராஜகுடும்ப உறுப்பினர்கள் வசம் சொத்துக்கள் பல கைமாறியுள்ளது. அந்த வகையில் மன்னர் சார்லஸுக்கு மிக நெருக்கமான Highgrove மாளிகை உட்பட சுமார் 345 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான கார்ன்வால் தோட்டம் தற்போது வேல்ஸ் இளவரசர் வில்லியம் வசம் உள்ளது. இந்த தோட்டமானது மொத்தம் 128,000 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. இந்த தோட்டத்திலிருந்து கடந்த ஆண்டு 21 மில்லியன் பவுண்டுகள் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும் சார்லஸ் மன்னரானதும், இந்த தோட்டமானது அவரது மகன் வில்லியம் வசமானது.

இருப்பினும், அதில் அமைந்துள்ள Highgrove மாளிகையானது நீண்ட கால குத்தகைக்கு எடுத்துள்ளார் மன்னர் சார்லஸ். இதனால் ஆண்டுக்கு 7,00,000 பவுண்டுகள் தொகையை மன்னர் சார்லஸ் இளவரசர் வில்லியத்திற்கு அளிக்க வேண்டும்.  இந்த Highgrove கடந்த 1980-ல் இருந்தே சார்லஸின் குடும்ப மாளிகையாக அமைந்துள்ளது. மேலும், தென் லண்டனிலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானமும் தற்போது வேல்ஸ் இளவரசர் வில்லியம் வசம் உள்ளது. மகாராணியார் காலமான பின்னர், அதன் அடுத்த நாளே உரிய ஆவணங்களை தயார் செய்து, Highgrove மாளிகையை நீண்ட கால குத்தகைக்கு எடுத்துள்ளார் மன்னர் சார்லஸ். இந்த மாளிகையானது மகாராணியார் கமிலா தங்கியிருக்கும் மாளிகைக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |