Categories
சினிமா

என்னது!…… சமந்தா பேயாக நடிக்க போகிறாரா?….. ஷாக்கான ரசிகர்கள்..!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது யசோதா என்ற பான் இந்தியா திரைப்படம் தயாராகி உள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இவர் வருண் தாவானுடன் இந்தியில் வெப்தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.

இதனை ‘தி ஃபேமிலி மேன்’ தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகே இயக்குகின்றனர். அதனை தொடர்ந்து இயக்குனர் அமர்க்கவுசிக் இயக்கத்தில் ஆய்ஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் மூலம் சமந்தா ஹிந்தியில் அறிமுகம் ஆகிறார். இந்த படத்தில் இவர் இளவரசியாகவும், பேயாகவும் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான பயிற்சியிலும் சமந்தா கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |