டெஸ்லா நிறுவனத்தில் ஒரே நாளில் சுமார் 100 பில்லியன் டாலர் சரிந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எலான் மஸ்க் டெஸ்லா என்ற எலக்ட்ரிக் கார்களை உருவாக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.இது உலக அளவில் புகழ் பெற்று வருகிறது. தென்னாப்பிரிக்காவில் பிறந்த இவர் டெஸ்லா என்ற கார் நிறுவனம் மற்றும் ஸ்பெஸ் எக்ஸ் என்ற விண்வெளி நிறுவனம் ஆகிய இரண்டையும் நடத்தி வருகிறார்.
இவர் தலைமை தாங்கும் அனைத்து நிறுவனமும் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்றுவரும் நிலையில் தற்போது இதன் மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. டெஸ்லா நிறுவனம் உலக அளவில் கடந்த இருபது ஆண்டு காலத்தில் ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய சாதனை படைத்தது.இந்த நிலையில் இந்நிர்வாக இயக்குனர் எலான் மஸ்க் இந்த ஆண்டு எலக்ட்ரிக் கார் வெளியிடப்படாது என கூறினார்.
ஏனெனில் இந்த வருடம் முழுவதும் மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்களை வேலையில் ஈடுபடுத்த நாங்கள் கவனம் செலுத்த உள்ளோம் என்று கூறினார். இச்செய்தியை வெளியிட்ட மறுநாளே டெஸ்லாவின் மதிப்பு 12% ஆக நியூயார்க் பங்கு சந்தையில் குறைந்தது. இதனால் இந்த நிறுவனத்தின் மதிப்பு தற்போது 100 பில்லியன் டாலர் அளவுக்கு சரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.