இயக்குனர் சங்கர் தற்போது பிரம்மாண்டமாக புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.
இயக்குனர் சங்கர் தற்போது ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இயக்குனர் சங்கர் எடுக்கும் எல்லா படங்களும் பிரம்மாண்டமாக தான் இருக்கும். அதே போல் தமிழ், தெலுங்கு இந்தி ஆகிய மொழிகளில் பிரமாண்ட பட்ஜெட்டில் இந்த புதிய படம் உருவாக இருக்கிறது. இந்தப் புதிய படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.மேலும் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க இருக்கிறார்.
இதனை அடுத்து சங்கர் தயாரிக்கும் இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் 23 கோடி ரூபாய் செலவு செய்துள்ளாராம். அதோடு இப்படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சிக்கு சுமார் 10 கோடி ரூபாய் செலவு செய்து எடுத்துள்ளாராம் இயக்குனர் ஷங்கர். தற்போது இந்த செய்தி திரை வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.