தமிழ் சினிமாவில் ரோஜா படத்தில் இடம்பெற்றுள்ள “சின்ன சின்ன ஆசை” பாடலில் மூலம் அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். அதனைத் தொடர்ந்து தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையும் கடந்து இவர் ஹாலிவுட் வரை சிறகடித்து பறந்தவர். தற்போது இவரின் இசையில் மணிரத்ன இயக்கத்தில் பொன்னியன் செல்வன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மேலும் இப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் “அடுத்த பத்து நாட்களுக்கு சைவமாக மாறுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.