உலக நாடுகளில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் பட்டியலில் இந்தியா 139வது இடத்தை பிடித்துள்ளதுக.
உலக நாடுகள் அனைத்திலும் ஆண்டிற்கு ஒருமுறை மகிழ்ச்சியாக மக்கள் வாழும் முறை மற்றும் சுகாதாரம் கல்வி வேலை போன்றவற்றை அடிப்படையில் அனைத்து நாடுகளையும் பட்டியலிடுவது வழக்கம் அதேபோல் இந்த ஆண்டும் உலக மக்கள் மகிழ்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்த நாடு பின்லாந்து ஆகும். அதற்கு அடுத்தடுத்த இடங்களை, டென்மார்க், ஸ்விட்சர்லாந்து நெதர்லாந்து ஸ்வீடன் ஜெர்மனி நார்வே இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகள் இடம் பிடித்துள்ளது.
இந்நிலையில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் பட்டியலில் இந்தியா 139 ஆவது இடத்தில் உள்ளது. இதில் ஜொர்டான் தான்சானியா மற்றும் ஜிம்பாவே ஆகிய 3 நாடுகள் கடைசி உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய அண்டை நாடுகளான சீனா 84வது இடத்தையும் நோபாளம் 87 ஆவது இடத்திலும் 101வது இடத்தில் வங்காள தேசமும் பாகிஸ்தான் 105 ஆவது இடத்திலும் மியன்மார் 126 வது இடத்திலும் இலங்கை 129 வது இடத்தையும் பிடித்துள்ளது .