எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக 2 அணிகளாக பிரிந்த போது ஜெயலலிதா அணியில் போட்டியிட்டு முதன்முதலாக சட்டமன்றத்தில் நுழைந்தவர் எடப்பாடி பழனிசாமி. அதன் பின்னர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் சசிகலா ஆதரவாளர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என அணி பிரிந்துள்ள நிலையில், சசிகலா அணியில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பிறகு 10 வருடங்கள் கழித்து அதிமுக ஆட்சி மாறி தற்போது திமுக ஆட்சியை பிடித்துள்ளது.
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தனது பெயரில் சமஸ்கிருத எழுத்து சேர்த்து எழுத தொடங்கி இருக்கிறார் என்று சிலர் விமர்சித்து வருகிறார். இதுவரை எடப்பாடி கே. பழனிச்சாமி என்று குறிப்பிட்டு வந்த நிலையில், அமித்ஷாவுக்கு அனுப்பிய கடிதத்தில் எடப்பாடி பழனிசுவாமி, என்று மாற்றப்பட்டுள்ளதாக விமர்சிக்கின்றனர். ஆனால் அவர் எப்போதும் ஆங்கிலத்தில் Edappadi K Palaniswami என்றுதான் குறிப்பிடுகிறார்.