Categories
தேசிய செய்திகள்

என்னடா இது!….. கொலையாளி கண்டு அஞ்சும் சக கைதிகள்….. வெளியான தகவல்….!!!!!

மத்திய பிரதேசத்தில் சாகர் மற்றும் போபாலில் காவலாளிகளை குறிவைத்து அடுத்தடுத்து 4 படுகொலைகளை அரங்கேற்றிய சிவப்பிரசாத் துருவ்(18) என்ற வாலிபர் கடந்த 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இந்த தொடர் கொலையாளி மீது 6 வழக்குகள் உள்ளது. அதனைத் தொடர்ந்து துருவ் நிகழ்த்திய கொலைகள் குறித்து அறிந்த சக கைதிகள் சிறைக்குள்ளேயும் அவரைப் பார்த்து அஞ்சி வருகின்றனர். கல், சுத்தியல் போன்ற பொருட்களால் கொலைகளை நிகழ்த்தியதால் எந்த பொருட்களை கொண்டும் சிறைக்குள்ளேயும் அசம்பாவிதங்களை நிகழ்த்தலாம் என்று அஞ்சி யாரும் அவரிடம் செல்ல தைரியம் இல்லை.

அதே நேரத்தில் சிறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் துருவிடம் எச்சரிக்கையாக உள்ளனர். குறிப்பாக அவர் குளிக்கும்போது அருகிலேயே இருக்கும் காவலர்கள் உணவு உண்டதும் பாத்திரத்தை உடனடியாக எடுத்து விடுகின்றனர். அவரை சக கைதிகளிடம் இருந்து தனிமைப்படுத்தி வைத்துள்ள. அதிகாரிகள் பாத்திரம் உள்ளிட்ட எந்த பொருட்களும் அவரிடம் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள். சிறையில் அவரது நடவடிக்கைகள் சுமூகமாக இருப்பதாக கூறியுள்ள சிறை அதிகாரிகள் அவரை திருத்துவதற்காக அறிவு சார்ந்த மற்றும் மதம் சார்ந்த புத்தகங்கள் படிக்க கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |