இங்கிலாந்து நாட்டில் உள்ள வேல்ஸ் கடற்கரை பகுதியில் 23 அடி நீளம் 4,000 கிலோ எடை கொண்ட கடல் வாழ் உயிரினம் ஒன்று திடீரென்று கரை ஒதுங்கியுள்ளது. இதைப் பார்த்த அந்த வழியாக வந்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் இந்த உயிரினத்திற்கு உடல் இருந்தாலும் முகம் இல்லை. முகம் முகம் இல்லாததால் மற்ற உயிரினங்களிலிருந்து இது வேறு மாதிரியாக இருந்துள்ளது. மேலும் கரை ஒதுங்கியுள்ளது உயிரினம் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
மேலும் இந்த வித்தியாசமான உயிரினம் ராட்சத அலையில் சிக்கி கடலின் ஓரமாக ஒதுங்கி இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது என்ன வகையான உயிரினம் என்பதை ஆராய்ச்சியாளர்களால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.