செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நாம் ஒரு விஷயத்தை இதில் கவனம் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஒரு தொலைநோக்கு பார்வை நம்மிடத்தில் இருக்கிறதா ? என்பதை நாம் பார்க்க வேண்டும். நான் கூட சின்ன வயதில் இருந்து பார்க்கிறேன். 1996ல் சென்னைக்கு வந்தேன் படிப்பதற்காக, 1996லிருந்து இதே நிலைதான் இன்றைக்கும் சென்னையில் நீடித்துகொண்டு இருக்கிறது. அதற்கு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம், தமிழக அரசாங்கம் தயாராக வேண்டும்.
தொலைநோக்குப் பார்வையோடு திட்டங்கள் வரவேண்டும். 2015ல் அவ்வளவு பெரிய வெள்ளம் வந்தது ஒரே நாளில் கடலுக்குப் போய்விட்டது. குடிதண்ணீர் பிரச்சனை இப்போ இவ்வளவு தண்ணீர் வந்தது, அதை சேமிப்பதற்கு அல்லது அதைப் பயன்படுத்துவதற்கு நம்மிடத்தில் ஏதாவது திட்டங்கள் இருக்கிறதா என்றால் அது ஜீரோவாக இருக்கிறது.
ஆகையால் தமிழக அரசாங்கம் ஒரு தொலைநோக்கு பார்வையோடு இந்த தண்ணீரை பயன்படுத்துவதற்கு திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.சென்னைக்கு வட கிழக்கு பருவ மழையில் மழை வரும் என்பது அனைவரும் அறிந்தது, அரசாங்கத்திற்கும் அறிந்தது. ஆனால் முன்கூட்டியே திட்டமிட்டு தூர்வாரும் பணி பல இடங்களில் நடைபெறவில்லை என்பது தான் எதார்த்த உண்மை.
இன்றைக்குக் கூட நாம் அம்பத்தூரில், கொரட்டூர் ஏரியினுடைய கொள்ளளவுக்கும் இன்னும் வசதிகள் இருக்கிறது. அதனால் அங்கு முறையாக தூர்வாரி, முகத்துவாரங்கள் தூர்வாரி அந்த ஏரிக்கு செல்வதற்கான தண்ணீர் வசதிகளை செய்திருக்க வேண்டும்.அதை தமிழக அரசாங்கம் இன்னும் நேரம் இருக்கிறது. துரித நேரங்களில் அனைத்து பகுதிகளிலும் தூர்வார வேண்டும் என்பதையும் நான் சொல்லிக் கொள்கிறேன்.