தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். இவர் ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் நடிகருமான என்டிஆர் என்று அழைக்கப்படும் டி என் டி ராமராவின் பேரன். ஜூனியர் என்டிஆர் சமீபத்தில் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். 1993-ஆம் வருடம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் ஜூனியர் என்டிஆர் அறிமுகமானார். அவர் நடிப்பில் கடைசியாக திரைக்கு வந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் இந்தியா முழுவதும் மெகாஹிட் ஆனது.
அதுமட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் இந்த திரைப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பை சினிமா விமர்சகர்கள் வெகுவாக பாராட்டி இருந்தனர். மேலும் அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு ஜூனியர் என்டிஆரின் அடுத்த படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுவரை அவர் 29 படங்களில் நடித்திருக்கின்றார். மேலும் அவரது 30 வது படத்தை கொரட்டல சிவா இயக்குவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.
இதே போல் ஜூனியர் என்டிஆர் 31 வது படத்தை கே.ஜி.எஃப் படத்தை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் இயக்குவார் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. கேஜிஎஃப் பாகம் 1 மற்றும் பாகம் 2 போன்ற படங்களை தொடர்ந்து இந்தியா முழுவதும் ஹீரோக்களால் அதிகம் விரும்பப்படும் இயக்குனராக பிரசாந்த் நீல் மாறி இருக்கின்றார். பிரசாந்த் தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் பிஸியாக இருக்கின்றார். இந்த நிலையில் ஜூனியர் என்டிஆர் படத்தை பிரசாந்த் இயக்குவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.