Categories
அரசியல் மாநில செய்திகள்

என்கிட்ட பணம் இல்லை… கமல் ஹெலிகாப்டரே வாங்கலாம்… சீமான் பேட்டி

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழ்நாடு தமிழர்களுக்கே என்பது என்னுடைய பிரச்சாரம் மட்டுமல்ல, அதற்கு முன்னாடி இருந்த முன்னோர்கள் சி.பா ஆதித்தனார், மா.பொ.சி  ஐயா பெரியார் அதே முழக்கத்தை வைத்தார். தமிழ்நாடு தமிழர்க்கே என்றால், ஆளுகிற  உரிமை அவர்களுக்கு தான். அயலாருக்கு இல்லை. இந்த நிலம் என் உரிமை.

இந்த முறை இலவசங்கள் அறிக்கையில்  வர வாய்ப்பு இருக்கிறதா என்றால், சரியான, சமமான, தரமான கல்வி. அறிவு வளம் என்பது ஒரு நாட்டின் மிக முதன்மையான அடிப்படை. அதை என் பிள்ளைகளுக்கு உலக தரத்திற்கு கொடுப்பேன். உலகத்தில் தென்கொரியா  தான் முதலில் இருக்கிறது. அதை தாண்டுவேன் என்கிறேன், உறுதியாக தாண்டுவேன்.

கமல்ஹாசன் காஞ்சிபுரத்தில் ஹெலிகாப்டரில் போயிருக்கிறார். கோயம்புத்தூருக்கு தனி விமானத்தில் போயிருக்கிறார் நீங்க எப்படி பாக்குறீங்க ? என்ற கேள்விக்கு, என்னிடம் உண்மையிலேயே காசு இல்லை. கேட்டா ரொம்ப நாள் நடிக்கிறேன், நிறைய படம் நடித்து இருக்கின்றேன் என்பார். பிக் பாஸ்ஸில் வாங்குன  காசு போதும், அவர் பறக்கலாம்.

சொந்தமாக கூட விமானத்தில் ஏறி பறக்கலாம் ,அது அவருடைய வசதிக்கு அவரு செய்கிறார். வேட்பாளருக்கு இவ்வளவு தான் செலவு செய்யணும் என்பதை தேர்தல் ஆணையம் தான் கேட்கணும் என சீமான் தெரிவித்தார்.

Categories

Tech |