Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்கிட்ட இப்படி கேக்குறாரு..! மாவட்ட ஆட்சியருக்கு பரபரப்பு மனு… விசாரணையில் சிக்கிய ஊழியர்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் இ-சேவை மைய தற்காலிக ஊழியர் ஆதார் கார்டு எடுக்க கூடுதல் கட்டணம் வசூலித்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் யுவராஜா என்பவர் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதி நிலக்கோட்டை புதுச்சேரி பகுதியில் வசித்து வரும் தேன்மொழி என்பவர் தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்திற்கு தனது 2 வயது குழந்தைக்கு ஆதார் கார்டு எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு யுவராஜா தேன்மொழியிடம் ஆதார் கார்டு எடுப்பதற்காக ரூபாய் 200 வசூலாக கேட்டதால் அதனை தேன்மொழி தட்டி கேட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து தேன்மொழி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் தாசில்தார் யூஜினுக்கு இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி யூசின் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் தேன்மொழி புகார் அளித்தது உண்மை என்று தெரியவந்தது. இதையடுத்து இ-சேவை மையத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்த யுவராஜை தாசில்தார் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Categories

Tech |