Categories
தேசிய செய்திகள்

என்கிட்டயேவா…! தன்னை தாக்கிய சிறுத்தையை….. பதிலுக்கு குத்தி கொன்று….. பழி தீர்த்துக் கொண்ட கூலித்தொழிலாளி….!!!!

கேரள மாநிலத்தில் தன்னை தாக்க வந்த சிறுத்தையை கூலித்தொழிலாளி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் மாங்குளம் பகுதியில் கால்நடைகளை கொன்று வந்த 12 வயது மதிக்கத்தக்க சிறுத்தையை கூண்டு வைக்கும் முயற்சியில் வனதுறையினர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த சிறுத்தை சிக்காமல் இருந்தது. இந்த நிலையில் மலைப்பகுதியில் பணிக்கு சென்ற கோபாலன் என்பவரை நேற்று காலை சிறுத்தை திடீரென தாக்கி இருக்கின்றது. அப்போது அதிர்ச்சி அடைந்த அவர் தப்பியோட முயற்சி செய்துள்ளார். இருப்பினும் அந்த சிறுத்தை மீண்டும் கோபாலனை தாக்கியதால் தனது கையில் இருந்த கத்தியால் சிறுத்தையை தலை, வயிறு பகுதிகளில் குத்தி இருக்கின்றார். இதனால் சிறுத்தை உயிரிழந்தது. சிறுத்தை தாக்கியதில் பலத்த காயமுற்ற கோபாலனை அந்த பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்காப்பிற்காக சிறுத்தையை கொன்ற கோபாலன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என அந்த மாநில அமைச்சர் அறிவுருத்தியுள்ளார்.

Categories

Tech |