Categories
சினிமா தமிழ் சினிமா

‘எனிமி’ பட பாடலுக்கு தனது செல்ல நாய்குட்டியுடன் ஆட்டம் போடும் கீர்த்தி சுரேஷ்… கியூட் வீடியோ…!!!

கீர்த்தி சுரேஷ் தனது நாய்குட்டியுடன் உட்கார்ந்து கொண்டே ‘டும் டும்’ பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவான எனிமி திரைப்படம் தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனந்த் ஷங்கர் இயக்கியிருந்த இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்திருந்தார். மேலும் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற டும் டும் பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்நிலையில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நாய் குட்டியுடன் உட்கார்ந்து கொண்டே ‘டும் டும்’ பாடலுக்கு நடன அசைவு செய்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. மேலும் எனிமி பட  இசையமைப்பாளர் தமன் இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘சூப்பர் சூப்பர் க்யூட்’ என பதிவு செய்துள்ளார்.

Categories

Tech |