விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகயுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனிமி. ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், தம்பி ராமையா, கருணாகரன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.
#Enemy WORLDWIDE Grand Release on #Dussehra pic.twitter.com/hYxvPzMXNh
— Vishal (@VishalKOfficial) September 6, 2021
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஷால், ஆர்யா இருவரும் ஆக்ரோஷமாக இருக்கும் போஸ்டருடன் எனிமி படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் இந்த படம் ஆயுத பூஜை தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.