நடிகர் விஷால் எனிமி படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் தற்போது வீரமே வாகை சூடும், எனிமி, துப்பறிவாளன்-2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள எனிமி படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதிரடி ஆக்ஷன் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் மிருணாளினி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Started my part of dubbing for #Enemy and the movie is in the final stage of post production.
Be ready to witness the high octane action movie!!! pic.twitter.com/zib2u1RhD4— Vishal (@VishalKOfficial) September 2, 2021
மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஷால் எனிமி படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் டப்பிங்கில் ஈடுபடும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.