முடி திருத்தும் பெண் கோடீஸ்வர வாலிபரை திருமணம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நைஜீரியா நாட்டில் உள்ள OWerri நகரில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் முடி திருத்தும் வேலை செய்து வந்துள்ளார். இவரிடம் முடி வெட்டுவதற்காக கோடீஸ்வர வாலிபர் ஒருவர் அடிக்கடி வந்துள்ளார். அப்போது இவர்களுக்கிடையே நட்பு உருவாகியுள்ளது. பின் அந்த நட்பு ஒரு காலகட்டத்தில் காதலாக மாறியுள்ளது. மூன்று ஆண்டுகளாக உயிருக்கு உயிராய் காதலித்த இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும் இது குறித்து அந்தப் பெண் கூறியதாவது. அவருக்கு முடி திருத்தும் போதுதான் எங்களுக்குள் நட்பு தொடங்கியது. பின்னர் அது காதலாக மாறியது. தற்போது நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். இப்போது எனது விருப்பமான வாடிக்கையாளர் எனது கணவர் தான் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.