தபால்காரர் முதியவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கச்சராயனூர் காட்டுவளவு பகுதியில் கிருஷ்ணன்(70) என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் தபால்காரரான செந்தில்குமார்(40) என்பவர் கிருஷ்ணனின் மருமகளுடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை அறிந்த கிருஷ்ணன் தனது மருமகளை கண்டித்ததோடு, செந்தில் குமாரிடம் ஏன் எனது மருமகளிடம் அடிக்கடி பேசுகிறாய் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் கோபமடைந்த செந்தில் குமார் கிருஷ்ணனை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் கிருஷ்ணனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செந்தில்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.