நடிகை ஷர்மிளா தனது மகனுக்கு விஷால்தான் ஸ்கூல் ஃபீஸ் கட்டி வருகிறார் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா உலகிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்வரும் நாட்களில் மலையாளம், கன்னடம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார் ஷர்மிளா. தற்பொழுது மலையாள படங்களில் நடித்தும் தொலைக்காட்சி தொடர்கள், வெப் தொடரிலும் நடிக்கின்றார். இவர் கிஷோர் சத்யா என்பவரை திருமணம் செய்து பிரிந்த பின் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்த நிலையில் ஒரு மகன் இருக்கிறார். ராஜேஷை விட்டு சென்ற 2014 ஆம் வருடம் பிரிந்தார்.
தற்பொழுது மகனுடன் வசித்து வரும் ஷர்மிளா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அவர் கூறியுள்ளதாவது, விஷால் தான் எனது மகனுக்கு ஸ்கூல் பீஸ் கட்டி வருகின்றார். சென்ற சில ஆண்டுகளாகவே பீஸ் கட்டுகின்றார். ஒரு நடிகை யாரிடமாவது 2000 கடன் வாங்கி விட்டு ஒரு வாரம் கழித்து தரவில்லை என்றால், ஒரு ஆணிடம் வாங்கினால் மாலை நேரத்தில் போன் செய்து வெளியே போகலாமா என கேட்பார்கள். ஆனால் விஷால் அப்படி இல்லை போன் பண்ண மாட்டார். மாறாக உங்களையும் மகனையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும், கவலைப்படாதீர்கள் என மெசேஜ் மட்டுமே அனுப்புவார். என் மகனைப் போல பல பேருக்கு ஸ்கூல் பீஸ் கட்டுகின்றார் என கூறியுள்ளார்.