Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“எனது படிப்பிற்காக பெற்றோரை சிரமப்படுத்தி விட்டேன்”…… தற்கொலை செய்த கல்லூரி மாணவி….. பெரும் பரபரப்பு….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு அருகில் உள்ள கல்லடி சிதம்பரபுரம் ராஜலிங்கபுறத்தில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியன் இவருக்கு பாப்பா(18) என்ற மகளும் மற்றும் 2 மகன்களும் உள்ளனர். இதில் பாப்பா நெல்லை அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்சி பட்டப்படிப்பில் சேர்ந்தார். இதற்கான கல்லூரி கட்டண ரூ.12,000 முத்துக்குமார் 2 தவணையாக செலுத்தினார். முத்துக்குமார் எலக்ட்ரீசியன் வேலை பார்த்த போதிலும் குடும்ப செலவு போதிய பணம் க்கு இன்றி தவித்தார். ஆனாலும் மகள் படிப்பிற்காக மிகுந்த சிரமப்பட்டு பணத்தை ஏற்பாடு செய்து கல்லூரியில் செலுத்தியதாக கூறப்படுகிறது. நேற்று முன் தினம் மாலை முத்துக்குமார் தனது மனைவியுடன் களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

அப்போது வீட்டில் இருந்த பாப்பா கதவை உள்புறமாக பூட்டி கொண்டு, தனது துப்பட்டாவல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்திற்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய முத்துக்குமார் அவரது மனைவியும் கதவு உட்புறமாக பூட்டியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு கதவை குச்சியால் திறந்து உள்ளே பார்த்தபோது பாப்பா தூக்கில் பிணமாக தொங்கியதே கண்டு கதறி அழுதனர். இது குறித்து களக்காடு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பாப்பாவின் கைப்பையை சோதனை செய்தனர். அதில் அவர் தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய உருக்கமான கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில், தனது படிப்பு செலவுக்காக பெற்றோர்களை சிரமப்படுத்தி விட்டதால் தற்கொலை செய்ய முடிவு எடுத்தேன் என்று எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |