பிரிட்டனை சேர்ந்த லாரா யங் என்பவர் தனது குடும்ப வருமானத்தை பெருக்க வேண்டும் என்பதற்காக ‘Rent My Handy Husband’ (எனது கைதேர்ந்த கணவர் விற்பனைக்கு) என்ற தலைப்பில் ஒரு இணையதளத்தை தொடங்கினார். லாராவின் கணவர் ஜேம்ஸ் ஒரு கலை நிபுணர். தேவை இல்லை என்று தூக்கிப் போடும் பொருட்களை வைத்து கலைப்பொருட்களை தயாரிப்பார். இப்படி அவர்கள் வீட்டில் அலங்காரம் செய்து வீட்டை தூய்மையாக எப்போதும் வைத்துக் கொள்வார். தோட்டத்தை பராமரிப்பது உள்ளிட்ட பல வேலைகளை ஜேம்ஸ் பார்த்துக் கொண்டு வந்துள்ளார்.
எனவே தனது கணவரின் இந்த செயலை லாரா பயன்படுத்த திட்டமிட்டார். அதன்படி இணையதளம் மூலம் தனது கணவரை மற்ற வீடுகளுக்கு வேலைக்கு அனுப்பினார். தனது கணவரை பணிக்க அனுப்ப ஒரு நாளைக்கு 35 யூரோக்கள் அதாவது இந்திய மதிப்பில் 3365 ரூபாய் வாங்குகிறார். லாரா ஜேம்ஸ் தம்பதியின் மூன்று குழந்தைகளில் இரண்டு பேர் ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகள். குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜேம்ஸ் வேலையை விட்டு நின்று விட்டார். இதனால் பண நெருக்கடிக்க ஆளான லாரா இது போன்ற புதிய முயற்சிகளை செய்து பணம் சம்பாதித்து வருகிறார்.