Categories
தேசிய செய்திகள்

“எனக்கு iPhone வேண்டாம்” பணத்தை கொடு…. சிறுவனை துடிக்க துடிக்க கொன்ற கார் ஓட்டுநர்…. போலீசார் அதிரடி நடவடிக்கை….!!!!

சிறுவனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுடெல்லியில் உள்ள ஜாமியா நகரில் கார் ஓட்டுநரான காலித் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் முகமது அப்துல் என்ற சிறுவனுடன் பழகி வந்துள்ளார். இதனையடுத்து காலித்  அந்த  சிறுவனிடம் தனக்கு iphone வாங்கி தருமாறு கூறி 72 ஆயிரம் ரூபாய்  பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அந்த சிறுவன் ஐபோனையும் வாங்கிக் கொடுக்காமல்,  பணத்தையும் திரும்ப  கொடுக்காமல் காலித்தை அலைக்கழித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த காலித் நேற்று அந்த  சிறுவனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது 2  பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காலித்  தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அந்த சிறுவனை சுட்டுவிட்டு  அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காலித்தை  கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |