Categories
கிரிக்கெட் விளையாட்டு

“எனக்கு மிகவும் வருத்தமான நாள் இது”…. உருக்கமான கடிதம் எழுதிய “இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர்”….!!

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தான் ஓய்வு பெறப்போவதாக உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்திய அணியில் ஸ்ரீசாந்த் வேகப்பந்து வீச்சாளராக இருந்துள்ளார். இவர் மொத்தமாக 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவ்வாறு இருக்க கடந்த 2013 ஆம் ஆண்டு இவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி போட்டிகளில் பங்கேற்க அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 7 வருடங்கள் கழித்து ஸ்ரீசாந்த் நீதிமன்றத்தை நாடி கடந்த 2020 ஆம் ஆண்டில் கிரிக்கெட் விளையாட இருந்த முழு தடையும் நீக்கியுள்ளார்.

அதன்பின்பு அவர் 2022 ஆம் ஆண்டிலிருந்து கேரள அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் ஸ்ரீசாந்த் தான் ஓய்வு பெறுவதாக கூறி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இன்று எனக்கு மிகவும் வருத்தமான நாள் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் இது பிரதிபலிப்பு மற்றும் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் நாளாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி கிரிக்கெட் வீரராக எனது 25 வருட வாழ்க்கையில் நான் போட்டி மற்றும் ஆர்வத்துடன் விளையாடி பல தொடர்களில் வெற்றி பெற்றுள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |