பணம் கொடுக்காததால் கூரை வீட்டிற்கு தீ வைத்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்குத் திருமணம் ஆகாததால் கூரை வீட்டில் தனியாக வசித்துள்ளார். இந்நிலையில் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் விக்னேஷ் என்பவர் கிருஷ்ணமூர்த்தியிடம் நன்கு பழகி வந்துள்ளார். இதனால் விக்னேஷ் கிருஷ்ணமூர்த்தியிடம் மது அருந்துவதற்காக அடிக்கடி பணம் வாங்கியுள்ளார். அதேபோல் கிருஷ்ணமூர்த்தியிடம் விக்னேஷ் மது அருந்துவதற்காக பணம் கேட்டபோது அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் கிருஷ்ணமூர்த்தியின் கூரை வீட்டின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கிருஷ்ணமூர்த்தி கூச்சலிட்டார். அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி செல்வதற்குள் விக்னேஷ் தப்பி சென்றுவிட்டார். அதன்பின் அக்கம்பக்கத்தினர் போராடி கூரையில் எரிந்த தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் வீட்டிலிருந்த 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்து கிருஷ்ணசாமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த காவல்துறையினர் விக்னேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.