Categories
தேசிய செய்திகள்

எனக்கு நியாயம் வேண்டும்…. காதலியின் வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்த வாலிபர்…. காத்திருந்த அதிர்ச்சி…!!!!!!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் அம்மனுக்கு கூழ்வார்த்தல் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவை தொடர்ந்து அன்று இரவு கலை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனால்  கிராம மக்கள் அங்கு கூடியுள்ளனர். இந்த நிலையில் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக ஆரணி நகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் சந்தேகப்படும்படியான நபர் பைக்கில் சுற்றி  திரிந்ததை  போலீசார் கண்காணித்துள்ளனர். அவரை பின் தொடர்ந்து சென்ற போது அவர் ஒரு வீட்டின் அருகே பைக்கை நிறுத்திவிட்டு சுவர் ஏறி குதித்து இருக்கின்றார்.

அவரை பின்தொடர்ந்த போலீசாரும் வீட்டுக்குள் தாவி அந்த இளைஞனை மடக்கிப் பிடித்துள்ளனர். அவர் திருடராக இருக்குமோ என்று சந்தேகத்தில் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் அவர் காதலியிடம்   நியாயம் கேட்பதற்காக வீட்டுக்குள் குதித்து இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. விசாரணையில் அந்த இளைஞன் போளூர் அருகில் இருக்கும் பொன் நகர் கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. 27 வயதாகும் அந்த நபரும் இந்த கிராமத்தை சேர்ந்த பெண்ணும் சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் வேலையில் இருக்க வேண்டுமென அந்த பெண் கண்டிஷன் போட்டுள்ளார். இதனால் இளைஞர் மலேசியாவிற்கு சென்று கார்பெண்டர் ஆக வேலை செய்து வந்துள்ளார். ஓரளவு செட்டில் ஆகும் அளவிற்கு சம்பாதித்த பின்னரே ஊர்  திரும்ப வேண்டும் என காதலி கூறியதனால் கடுமையாக உழைத்து உள்ளார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் தன் கிராமத்தை சேர்ந்த வேறு ஒரு நபரை அந்த இளம் பெண் திருமணம் செய்துள்ளார். பெற்றோரின் சம்மதத்தின் பெயரில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து மலேசியாவில் இருந்து காதலனுடன் போனில் பேசுவதை அந்த பெண் தவிர்த்து உள்ளார்.

இதனால் நண்பர்கள் மூலமாக காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆனதை அறிந்த இளைஞன் அதிர்ச்சி அடைந்து ஊர் திரும்பி உள்ளார். தன்னை ஏமாற்றிய காதலியை சந்தித்து நியாயம் கேட்க பலமுறை முயற்சி செய்துள்ளார். ஆனால் சரியான நேரம் கிடைக்காததால் அவர்களால் சந்தித்துக் கொள்ள முடியவில்லை. இந்த சூழலில் தான் திருவிழா நேரத்தில் காதலியின் ஊருக்கு வந்திருக்கிறார். அப்போது சுவர் ஏறி குதித்த போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து இளைஞரின் தந்தையை காவல் நிலையம் வரவழைத்து நடந்ததை கூறி எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் எழுதி வாங்கிக்கொண்டு இளைஞரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர் போலீசார்.

Categories

Tech |