Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு ஜாதி மேல் நம்பிக்கையில்லை…! எல்லாரையும் சமமாக பார்க்கிறேன்… கெத்தாக பேசிய திருமாவளவன் …!!

எனக்கு சாதி மேல் நம்பிக்கை கிடையாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

அரக்கோணம் படுகொலை குறித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அப்படியே திருமாவளவனை நீ பண்டாரம் டா….  நீ பற பண்டாரம்… உன்னை பார்த்துகிறேன்…  தீர்த்துகிறேன் என மேடையில் பேசுகிறார்கள். நான் பாவம் என பரிதாபம் படுவேன்…. பாவம் அவர் ராமதாஸ் உசுப்பேத்த உசுப்பேத்த திருமாவளவனை வாடா போடா என்று பேசுகிறார்.

நீ மாடு மேய்த்துக் கொண்டு இருந்தவன் தானே. நீ வந்து ஆண்டிபண்டாரம் தானே என சொல்கிறார். எனக்கு சாதி மேல் நம்பிக்கை கிடையாது, நான் மனிதன் அவ்வளவுதான். நான் ஒரு பெரியாரின் மாணவன், நான் அம்பேத்கரின் மாணவன், நான் மார்க்சிய கொள்கையில் நம்பிக்கை உள்ளவன், சமூக மாற்றத்தின் மீது நம்பிக்கை உள்ளவன் அவ்வளவுதான்.

நீ என்ன பெயர் சொன்னாலும் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. நீ என்ன வேண்டுமென்றாலும் பேசிக் கொள். உனக்கு இழிவு புத்தி இருந்தால் நீ இழிவாக பார்ப்பாய். உனக்கு கீழ்தனமான புத்தி இருந்தால் கீழ்த்தனமாக பார்ப்பாய். நான் எல்லோரையும் சமமாகப் பார்க்கக் கூடியவன், உயர்வாக மதிக்க கூடியவன், எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை என தெரிவித்தார்.

Categories

Tech |