கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது கடவுள் கொடுத்த வரம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த 1ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா தொற்றினால் பாதிக்கப்பட்டு வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் அதிபருக்கு கொரோனா அறிகுறிகள் அதிகமானதால் மேரிலேண்ட் மாகாணத்தில் இருக்கும் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது. நான்கு நாட்கள் ராணுவ மருத்துவமனையில் இருந்த ட்ரம்ப் நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் ஆகி வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.
மருத்துவமனையில் இருந்து புறப்படும் முன் தனது ட்விட்டர் பக்கத்தில் நான் நலமாக இருக்கின்றேன். வெகுவிரைவாக பிரச்சாரத்திற்கு திரும்பி விடுவேன் என குறிப்பிட்டார். இந்நிலையில் தனது உடல்நிலை குறித்து அதிபர் ட்ரம்ப் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசிய அவர் நான் தொற்றினால் பாதிக்கப்பட்டது கடவுள் எனக்கு கொடுத்த வரமாகவே கருதுகின்றேன்.
கொரோனா தொற்று எனக்கு உறுதியானது அதற்கான மருந்தை கண்டு பிடிப்பதற்கான முக்கியத்துவத்தை உணரச் செய்தது. அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் பேரழிவை ஏற்படுத்திய கொரோனா தொற்றை உருவாக்கிய சீனா அதற்கு அதிக விலையை கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
A MESSAGE FROM THE PRESIDENT! pic.twitter.com/uhLIcknAjT
— Donald J. Trump (@realDonaldTrump) October 7, 2020