215 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸால் உலக நாடுகள் முழுவதும் முடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அனைத்து சர்வதேசப் போட்டிகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள் முடங்கி இருக்கும் ரசிகர்களுக்கு இது மிகப் பெரிய துயரத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு முடிவு குறித்தும், மீண்டும் சர்வதேச போட்டிகள் நடைபெறுவது குறித்தும் விளையாட்டு பிரபலங்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை பேசியிருக்கிறேன்.
அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர், கொரோனா பிரச்சனை முடிந்து எப்போ மீண்டும் கிரிக்கெட் போட்டி தொடங்க போகிறது ? எத்தனை போட்டிகள் விளையாடப் போகிறோம் என்பது பெரிய விஷயம் அல்ல. என்னை பொறுத்தவரை முதலில் குடும்ப நலனே முக்கியம். இந்த சூழல் நீடித்தால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து முடிவெடுப்பேன் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.