சென்னை தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி சத்யா (20). இவரை சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன்பு ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(23) என்பவர் தள்ளி கொலை செய்துவிட்டு அதன் பின் அவர் தப்பிஓடி உள்ளார். ரயில் நிலையத்தின் முன்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பாக சத்யாவை சதீஷ் தள்ளிவிட்டுள்ளார். இதனால் தண்டவாளத்திலேயே உடல் நசங்கி சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனை அடுத்து கல்லூரி மாணவி சத்யாவை கொலை செய்த சதீஷ் என்பவரை போலீஸர் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் விசாரணையில் சதீஷ் அளித்த வாக்குமூலத்தில் சத்யா தன்னை பல வருடங்களாக காதலித்து வந்ததாகவும் திடீரென தனது காதலை முடித்துக் கொண்டதால் எனக்கு கிடைக்காத சத்தியா வேறு யாரையும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ கூடாது என்ற எண்ணத்திலேயே அவரை தள்ளிவிட்டேன். அவரை கொலை செய்ய இரண்டு முறை முயற்சி செய்ததாகவும் அதன் பின் நேற்று ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவர் அளித்த வாக்குமூலத்தையும் போலீஸர் பதிவு செய்தனர் விசாரணைக்கு பின் கோட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கொலையாளி சதீஸ் சிறையில் அடைக்கப்பட இருக்கின்றார்.