Categories
கரூர் மாவட்ட செய்திகள்

எனக்கு கல்யாணம் வேண்டாம்… வாலிபரின் விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து  தனியார் கல்லூரி விரிவுரையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் வங்காபாளையத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  தமிழ்ச்செல்வன் என்ற மகன்இருந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி பிஜிபி பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்ச்செல்வனின் தாய் ஜானகி அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்துள்ளார்.

ஆனால் தமிழ்ச்செல்வனோ தனக்கு திருமணம் வேண்டாம் எனவும், தனக்கு மிகவும் குறைவான சம்பளமே உள்ளதால் அதனை வைத்துக்கொண்டு குடும்பத்தை நடத்த மிகவும் சிரமமாக இருக்கும் எனவும் கூறி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மிகவும் மன வேதனையில் இருந்து வந்த தமிழ்ச்செல்வன் தனது வீட்டில் உள்ள மண்ணெண்ணையை உடல்  முழுவதும் ஊற்றி கொண்டு  தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து தமிழ்ச்செல்வனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அளித்த  சிகிச்சை பலனின்றி தமிழ்ச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து அவரது தாய் ஜானகி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |