Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு அந்த ரோல் நடிக்கத்தான் ஆசை”…. பல நாட்களுக்கு பிறகு…. தன் ஆசையை கூறிய பிரபல நடிகர்….!!!!

சார்பட்டா பரம்பரை படத்தில் சக குத்துச் சண்டை வீரராக ராமன் கதாப்பாத்திரத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் தனது ஆசையை பல நாட்களுக்கு பிறகு  இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

பா ரஞ்சித் இயக்கத்தில் முன்னணி நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படத்தில் ஜான் கோக்கென், சந்தோஷ் பிரதாப், ஷபீர் கல்லரக்கல், ஜான் விஜய், பசுபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தின் கதை 1970களில் சென்னையில் பிரபலமான குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்திருந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களின் பெஸ்ட்டை  தெரிவித்தனர். குறிப்பாக இப்படத்தில் சக குத்துச்சண்டை வீரராக ராமன் கதாப்பாத்திரத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் பல நாட்களுக்கு பிறகு தனது ஆசையை இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “டான்ஸிங் ரோஸ் ரோலில் நடிக்க ஆசைப்பட்டதாக கூறியுள்ளார். படப்பிடிப்பிற்கான வொர்க் ஷாப்பின் போது தான் டான்ஸிங் ரோஸ் கேரக்டரை செய்து காட்டியதாகவும் அதனை உதவி இயக்குநர்கள் படம்பிடித்து இயக்குநர் ரஞ்சித்திடம் காட்டியதாகவும் ஆனால் அவர் தான் ராமன் கேரக்டருக்கு தான் பொருந்துவேன் என உறுதியாக கூறினார். எனக்கு அது க்ளிக்கானது மகிழ்ச்சி” என கூறியுள்ளார். சந்தோஷ் பிரதாப் தற்போது ஹன்சிகா மோத்வானியுடன் க்ரைம் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |